mmht-logo

மெட்ராஸ் மனநல அறக்கட்டளை தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மனநலப் பேணலும், குடி, போதைப்பொருள் வயமை நீக்கமும் உளவியல்வழிப் பண்டுவச் சேவையும் வழங்கிவரும் மனநல மையமாகும்.

இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் சேவைத் தகவல் பகுதியைப் பார்க்கவும்.

தொலைநோக்கு

மனநலப் பேணலை மேலும் பரவலாகக் கிடைக்கக்கூடியதாகச் செய்வதும் பற்றாக்குறை இடைவெளியை அகற்றுவதும்

மேற்கொள் பணி

வளம்குறைந்த பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு அகல்விரிவான, செலவு தாங்கக்கூடிய, எளிதில் அணுகக்கூடிய மருத்துவப்பேணலை வழங்கும் மனநலப்பண்டுவ நிலையம் ஒன்றை நிறுவி நடத்துவது.

மதிப்பியல் விழுமங்கள்

அனைவருக்கும் சுகாதார உரிமை என்றால் ஒவ்வொருவருக்கும் தேவையான சுகாதார சேவைகள் அவரவர்களுக்குத் தேவையான போதும் வசதியான இடத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகாமல் பெறுவதற்கு இயலவேண்டும். அரசுக்கும் சமூகத்துக்கும் உள்ள கூட்டுப்பொறுப்பில் பங்கெடுத்துக் கொள்ள சென்னை மனநல மையம் குறிக்கோள் கொண்டுள்ளது.

மனநல மருத்துவர்கள்

அறங்காவலர்கள்